Contrôle des motifs de détention en Tamoul

Version imprimable (PDF, 183 Ko)

கனடாவின் குடிநுழைவு மற்றும் அகதி வாரியம்
குடிநுழைவு பிரிவு

யார் இந்த துண்டுபிரதியை வாசிக்க வேண்டும்?

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரோ தடுப்புக்காவலில் இருந்து கனடா குடிநுழைவு மற்றும் அகதி வாரியத்தின் (ஐஆர்பி)IRB (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) குடிநுழைவு பிரிவால் தடுப்புக்காவல் மறுஆய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தால் நீங்கள் இந்த துண்டுபிரதியை வாசிக்க வேண்டும்.

தடுப்புக்காவல் மறுஆய்வுகளில் ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) -யின் பங்கு?

ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) உங்கள் வழக்கை விசாரித்து உங்களை தடுப்புக்காவலில் வைக்கவேண்டுமா அல்லது விடுதலை செய்யவேண்டுமா என்பதை தீர்மானிக்கும். ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) என்பது சட்டப்படியான தீர்மானங்களை எடுக்கும் ஒரு சுதந்திர நிர்வாக தீர்ப்பாயமாகும்—அது ஒரு நீதிமன்றம் போன்றது தான், ஆனால் நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

தடுப்புக்காவல் மறுஆய்வுகளில் கனடா எல்லை சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ) CBSA/ASFC -யின் பங்கு என்ன?

கனேடிய எல்லைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் செய்வது தான் சிபிஎஸ்ஏ CBSA/ASFC -யின் பங்காகும். கனடாவிற்குள் நுழையவோ தங்கவோ உரிமையில்லாதவர்களை தடுப்புக்காவலில் வைக்கவும், நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றவும் செய்யும் பொறுப்பு இந்த அமைப்பிற்கு தான் உள்ளது.

குடிநுழைவு காரணங்களுக்காக நீங்கள் சிபிஎஸ்ஏ CBSA/ASFC -யால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளீர்கள். அடுத்து என்ன நடக்கும்?

நீங்கள் ஒரு நிரந்திர குடியிருப்புரிமை பெற்றவராகவோ அல்லது வெளிநாட்டின் பிரஜையாகவோ இருந்தால் நீங்கள் ஏன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டீர்கள் என்பதை மறுஆய்வு  செய்வதற்கான ஒரு சுதந்திர விசாரணைக்கான உரிமை உங்களுக்கு உண்டு. சிபிஎஸ்ஏ CBSA/ASFC உங்களை தடுப்புக்காவலில் வைக்கும்போது, ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) -யின் குடிநுழைவு பிரிவுக்கு அதை சிபிஎஸ்ஏ CBSA/ASFC தெரிவிக்க வேண்டும். உறுப்பினர்  என்று அழைக்கப்படும் ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR)) தீர்மானம் எடுப்பவர் உங்களை தடுப்புக்காவலில் எடுத்த 48 மணிநேரத்திற்குள்ளாக அல்லது எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு தடுப்புக்காவல்  மறுஆய்வு விசாரணை  நடத்துவார். விசாரணையின் முடிவில், நீங்கள் தடுப்புக்காவலில் இருக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமா என்பதை உறுப்பினர் தீர்மானிப்பார்.

தடுப்புக்காவல்  மறுஆய்வு விசாரணை எங்கே எப்போது நடைபெறும் என்பதை தெரிவிக்கும் அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.

  • நிரந்திர வசிப்புரிமை பெற்றபவர் என்பவர் நிரந்திரமாக கனடாவில் வாழ கனடா அரசாங்கத்தின் அனுமதி பெற்றவர். நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்கள் பிந்நாட்களில் கனடிய குடிமக்களாக விண்ணப்பம் செய்யலாம்.
  • வெளிநாட்டு பிரஜை என்பவர் கனடா குடிமகனோ அல்லது கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெறாத பிற நாட்டை சேர்ந்தவர்.

யார் உங்களுக்கு உதவ முடியும்?

தடுப்புக்காவல்  என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. உங்கள் விசாரணையின் போது உங்களுக்காக நீங்களே ஆஜராகி வாதாடலாம் என்ற போதிலும், உங்களுக்கு உதவ நீங்கள் ஒரு வக்கீலையும் அமர்த்திக்கொள்ளலாம். அந்த வக்கீல் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது பதிவு பெற்ற ஒரு குடிநுழைவு ஆலோசகராகவோ இருக்கலாம். நீங்கள் க்யூபெக்கில் இருந்தால், வக்கீல் ஒரு நோட்டரியாகவும் இருக்கலாம். உங்கள் வக்கீலின் கட்டணத்தை செலுத்த வேண்டிய பொறுப்பு உங்களுடையது. மாகாண தகுதி உடையவராக இருந்து, உங்கள் வக்கீலுக்கு கொடுப்பதற்கான போதிய பணம் இல்லையென்றால், உங்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்கலாம். குடிநுழைவோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் சில சமுதாயங்கள் அல்லது மத நிறுவனங்கள் உங்களுக்கு உதவக்கூடும். மேலதிக தகவல்கள் பெற ஒரு சிபிஎஸ்ஏ CBSA/ASFC அலுவலரின் உதவியை நாடுங்கள். நீங்கள் ஒரு வக்கீலை அமர்த்த தீர்மானித்தாலோ அல்லது யாருடைய உதவியையாவது பெற தீர்மானித்தாலோ அதை எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் செய்யவேண்டும்.

ஒரு தடுப்புக்காவல்  மறுஆய்வு விசாரணையில் என்ன நடக்கும்?

உறுப்பினர்  விசாரணைக்கு பொறுப்பானவர். உறுப்பினர், ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தும் என்ன நடக்கப்போகிறது என்பதை விளக்கியும் விசாரணையை தொடங்குவார். உங்களுக்கு பிரஞ்சு அல்லது ஆங்கிலம் விளங்காவிடில், விசாரணையை உங்களுக்கு மொழிப்பெயர்க்க ஒரு மொழிப்பெயர்ப்பாளர் இருப்பார்.

உங்கள் விசாரணையில் மொழிப்பெயர்ப்பாளர் இருந்தால், நீங்கள் இருவரும் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துக்கொள்கிறீர்களா என்பதை உறுப்பினர் பரிசோதிப்பார்.

அடுத்து:

  • சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி  நீங்கள் ஏன் தடுப்புக்காவலில் உள்ளீர்கள் என விளக்கி ("தடுப்புக்காவலுக்கான காரணங்கள்")  அவர்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவான காரியங்களை வழங்குவார். தடுப்புக்காவலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் கொடுக்கப்படலாம்.
  • உங்களுக்கு அல்லது உங்கள்  வக்கீலுக்கு பதிலளிக்கவும் உங்கள் கருத்தை விளக்கவும் கேள்விகள் கேட்கவும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
  • விசாரணையில் தகவல்களை அளிக்க சாட்சிகள் இருந்தால், சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி, நீங்கள், உங்கள் வக்கீல் அல்லது உறுப்பினர்  ஆகியவர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்கலாம்.
  • சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி, நீங்கள் அல்லது உங்கள் வக்கீல் ஆகியவர்களிடம் விசாரித்தப்பின்னர், நீங்கள்  தடுப்புக்காவலில் இருக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமா என்பதை உறுப்பினர் தீர்மானிப்பார்.

தடுப்புக்காவலுக்கான காரணங்கள் யாவை ?

பின்வரும் சூழ்நிலைகளில் குறைந்தது ஒன்றாவது உங்களுக்கு பொருந்திப்போவதாக சிபிஎஸ்ஏ CBSA/ASFC நினைத்தால் நீங்கள் தடுப்புக்காவலில் இருக்கவேண்டும் என்று உறுப்பினர் வாயிலாக தெரிவிக்கும்.

  1. நீங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவர்.

    இந்த வாதத்திற்கு ஆதரவாக சிபிஎஸ்ஏ  பின்வரும் உதாரணங்களை தெரிவிக்கலாம்:

    • கடந்த காலத்தில் வன்முறையான நடத்தை.
    • வன்முறை, ஆயுதங்கள், போதை அல்லது பாலியல் போன்ற குற்றங்களுக்காக தண்டணை பெற்றமை; அல்லது
    • போதை அல்லது மது அடிமைத்தனம் தொடர்பான பிரச்சனைகள்.

    நீங்கள் ஆபத்தானவராக கருதப்பட வேண்டும் என்ற தனது கருத்துக்கு ஆதரவாக, சிபிஎஸ்ஏ CBSA/ASFC உங்களது எந்தவொரு நடத்தை, செயல்பாடுகள் மற்றும் நிகழ்பாடுகள் போன்றவற்றை வழங்கலாம்.

    சிபிஎஸ்ஏ CBSA/ASFC நீங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவர் எனக்கூறினால் நீங்கள் ஆபத்தானவர் அல்ல என்பதை விளக்கும் உங்கள் ஆதாரங்களை உறுப்பினருக்கு காண்பிக்கலாம்.

  2. ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படும் போது நீங்கள் ஆஜராகாமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். உதாரணமாக, ஒரு விசாரணைக்கு அல்லது கனடாவிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்காக அழைக்கப்படும் போது.

    இந்த கருத்துக்கு ஆதரவாக  சிபிஎஸ்ஏ, CBSA/ASFC  நீங்கள் இதற்கு முன் வராமல் போன குடிநுழைவு சந்திப்பு நேரங்கள், கனடாவில் வெளியேறுவதற்கான அழைப்பிற்கு செவி கொடாமை, சட்டத்தை மீறியது அல்லது உங்களிடம் நம்பத்தன்மை அல்லது நாணயமில்லை என்பன போன்றவற்றை உதாரணமாக முன்வைக்கலாம். நீங்கள் வருவீர்களா வரமாட்டீர்களா என்பதை தீர்மானிக்க இந்த காரியங்களை எல்லாம் உறுப்பினர் கருத்தில் கொள்ளுவார்.

    சிபிஎஸ்ஏ CBSA/ASFC நீங்கள் ஆஜராகமாட்டீர்கள் எனக்கூறினால் நீங்கள் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படும் போது ஒழுங்காக ஆஜராவீர்கள் என்பதை கூறும் உங்கள் ஆதாரங்களை உறுப்பினருக்கு காண்பிக்கலாம்.

  3. உங்கள் அடையாளம் நிரூபிக்கப்படவில்லை ஆனால் நிரூபிக்கப்பட இயலும்.

    அடையாள ஆவணங்கள் எதுவுமில்லாமல் நீங்கள் கனடாவிற்கு வந்திருக்கலாம் அல்லது உங்களிடம் இருக்கும் அடையாள ஆவணங்கள் போலியானதாக இருக்கலாம்.
    இது தான் பிரச்சனை என்றால், மந்திரியின் கருத்து என்னும் ஒரு ஆவணத்தில் மந்திரி கையெழுத்திடுவார். இந்த ஆவணம் கையெழுத்தான உடன் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க சிபிஎஸ்ஏ CBSA/ASFC நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    உங்கள் அடையாளத்தை நிரூபிக்க நீங்கள் சிபிஎஸ்ஏ-வுக்கு உதவ வேண்டும். அடையாள  ஆவணங்களை பெற முயற்சிப்பது அல்லது உங்கள் அடையாளத்தை நிரூபிக்க சிபிஎஸ்ஏ-க்கு உதவும் தகவல்களை அளிப்பது போன்றவற்றால் அதை நீங்கள் செய்யலாம்.

    ஐஆர்பி (Immigration Division of the Immigration and Refugee Board of Canada (IRB)/Section de l'immigration de la Commission de l'immigration et du statut de réfugié du Canada (CISR) )உறுப்பினர்  தீர்மானம் எடுக்கும் முன்னர் சிபிஎஸ்ஏ CBSA/ASFC -உடனான உங்கள் ஒத்துழைப்பை கருத்தில் கொள்ளுவார்.

  4. பாதுகாப்பு காரணங்களுக்காக அல்லது  மனித உரிமை மீறல் அல்லது சர்வதேச உரிமைகள் மீறல், கடுங் குற்றச்செயல்பாடு, குற்றம் புரிதல் அல்லது  கூட்டுச்சேர்ந்து குற்றம் புரிதல் போன்ற காரணங்களுக்காக உங்களை கனடாவிற்குள் அனுமதிக்க இயலாது என சிபிஎஸ்ஏ நினைக்கிறது

    இந்த காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய சிபிஎஸ்ஏ CBSA/ASFC தான் எடுக்கும் நடவடிக்கைகளை விளக்கும். இந்த சூழ்நிலையில், சிபிஎஸ்ஏ CBSA/ASFC –யின் சந்தேகம்  நியாயமானதுதானா மற்றும் அதை விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை அது எடுக்கிறதா என்பதை மட்டுமே உறுப்பினர் கருத்தில் கொள்ள முடியும்.

    சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி சொல்வதை கவனமாக கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருந்தால், மேலதிக தகவல்களைக் கேட்டுப் பெறுங்கள்.

உங்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உரிய காரணங்கள் உள்ளனவா என்று உறுப்பினர் தீர்மானிப்பார். தடுப்புக்காவலுக்கான காரணங்கள் இருந்தபோதிலும், தடுப்புக்காவலுக்கு சரியான மாற்று இருந்தால் உறுப்பினர், உங்களை விடுதலை செய்யலாம்.

தடுப்புக்காவலுக்கு மாற்று என்ன ?

தடுப்புக்காவலுக்கு மாற்று என்பது உங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தடுப்பதற்காக  உறுப்பினர்  விதிக்கும் நிபந்தனைகளாகும்.

ஊரடங்குக்கு கீழ்படிதல், குறிப்பிட்ட நபருடன் வாழுதல், அல்லது மது அருந்துவது அல்லது போதை மருந்துகளை தவிர்த்தல் போன்றவை நிபந்தனைகளுக்கு உதாரணங்கள். உங்கள் வழக்குக்கு குறிப்பாக எந்த நிபந்தனைகள் தேவை என்பதை உறுப்பினர் தீர்மானிப்பார்.

விடுதலைக்கான நிபந்தனைகளோடு கூடுதலாக ஒரு பிணைமுறி தேவையா என்பதையும் உறுப்பினர் தீர்மானிப்பார். பிணைமுறிகள் இரண்டு வகைப்படும்: பண பிணை முறிகள் மற்றும் செயல்பாடு பிணைமுறிகள். பிணைமுறியை அளிக்கும் உத்திரவாதி உதாரணமாக, ஒரு நண்பராகவோ, ஒரு குடும்ப உறுப்பினராகவோ அல்லது சமுதாய பணியாளராக இருக்கலாம். உங்கள் விசாரணையின் போது, சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி மற்றும் உறுப்பினர்  உங்களிடம் நீங்கள் உத்திரவாதியாக்க நினைக்கும் நபர் குறித்த  தகவல்களை கேட்கலாம். அந்த உத்திரவாதி பொருத்தமானவர் தானா என்பதை தீர்மானிக்க உறுப்பினருக்கு இது உதவும்.

உங்கள் விசாரணைக்கு நீங்கள் தயாராகும் போது, நியாயமான மாற்றுக்கள் குறித்தும் நீங்கள் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, உத்திரவாதியின் இயலாற்றலை கருத்தில் கொள்ளவேண்டும், பிணையாக கொடுக்க எவ்வளவு பணம் கிடைக்கும் மற்றும் உறுப்பினர்  தீர்மானம் செய்ய உதவியாக பிற தகவல்களை அளித்தல் போன்றவை. சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி மற்றும் உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க உத்திரவாதி ஆஜராவதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

  • பண பிணை முறி (அல்லது வைப்புநிதி)

    உறுப்பினர் பண பிணை முறிக்கு உத்தரவிட்டால், நீங்களோ அல்லது வேரொரு நபரோ (ஒரு உத்திரவாதி) ஒரு தொகையை (பணம்) அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். இது, உங்கள் விடுதலைக்கான எல்லா நிபந்தனைகளுக்கும் நீங்கள் கீழ்படிவதை உறுதி செய்வதற்கானது. நீங்கள் நிபந்தனைகளுக்கு கீழ்படியவில்லையெனில் கனடா  அரசாங்கம் பணத்தை வைத்துக்கொள்ளும், சிபிஎஸ்ஏ CBSA/ASFC உங்களை கைது செய்து மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கும்.

  • செயல்பாடு பிணைமுறி (அல்லது உத்திரவாதம்)

    உறுப்பினர் செயல்பாடு பிணைமுறிக்கு உத்தரவிட்டால், ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை கட்ட வாக்குறுதி அளிக்கும் ஒரு ஆவணத்தில் உங்கள் உத்திரவாதி  கையெழுத்திட வேண்டும். உங்கள் விடுதலைக்கான எல்லா நிபந்தனைகளுக்கும் நீங்கள் கீழ்படிவீர்கள் என்பதற்கான வாக்குறுதி இது. நீங்கள் நிபந்தனைகளுக்கு கீழ்படியவில்லையெனில், உங்கள் உத்திரவாதியிடமிருந்து பணத்தை கனடா அரசாங்கம் வசூலிக்கும். சிபிஎஸ்ஏ CBSA/ASFC  உங்களை கைது செய்து மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கும்.

  • உத்திரவாதி

    உத்திரவாதி என்பவர் உங்கள் விடுதலைக்கான நிபந்தனைகளை நீங்கள் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் ஒரு நம்பகமான நபர் ஆவார். செயல்பாடு பிணைமுறியை அளிக்க, உங்கள் உத்திரவாதி ஒரு கனடிய குடிமகனாகவோ அல்லது கனடாவில் நிரந்திர வசிப்புரிமை பெற்றவராக இருக்கவேண்டும். பிணைத்தொகையை அவர்களால் செலுத்த இயலும் என்பதையும் உங்கள் விடுதலைக்கான நிபந்தனைகளுக்கு நீங்கள் கீழ்படிவதை உறுதி செய்ய இயலும் என்பதையும் அவர்கள் காண்பிக்க வேண்டும்.

சிபிஎஸ்ஏ CBSA/ASFC பிரதிநிதி, நீங்கள் அல்லது உங்கள் வக்கீல் ஆகியவர்களிடம் விசாரித்தப்பின்னர், நீங்கள்  தடுப்புக்காவலில் இருக்க வேண்டுமா அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமா என்பதை உறுப்பினர் தீர்மானிப்பார். பொதுவாக, விசாரணையின் முடிவில் தனது தீர்மானத்தையும் அதற்கான காரணங்களையும் உறுப்பினர் தெரிவிப்பார். எனினும், பிரச்சனைகள் சிக்கலானதாக இருந்தாலும் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக எல்லா சான்றுகளையும் மறுஆய்வு  செய்ய அதிக சமயம் தேவைப்பட்டாலும் உறுப்பினர்  தனது தீர்மானத்தை தெரிவிக்க வேறொரு விசாரணை தேதியை குறிக்கலாம்.

நீங்கள் தடுப்புக்காவலில் இருக்க வேண்டுமென உறுப்பினர் தீர்மானித்தால் என்னவாகும்?

நீங்கள் தடுப்புக்காவலில் இருக்க வேண்டுமென உத்தரவானால், அடுத்த ஏழு நாட்களுக்குள்ளாக மற்றொரு தடுப்புக்காவல்  மறுஆய்வு நடைபெறும். இரண்டாவது மறுஆய்வியிலும், உறுப்பினர்  உங்களுக்கு மறுபடியும் தடுப்புக்காவல் உத்தரவை கொடுத்தால், உங்கள் தடுப்புக்காவலுக்கான காரணங்கள் 30 நாட்களில் மறுபடியும் மறுஆய்வு செய்யப்படும், அதன் பின்னர் நீங்கள் விடுதலையாகும் வரை அல்லது கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் வரை ஒவ்வொரு 30 நாட்களிலும் மறுஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு தடுப்புக்காவல் மறுஆய்வின் போதும், உங்கள் விடுதலைக்கான வேண்டுகோளுக்கு ஆதரவான புதிய நிகழ்பாடுகளை நீங்கள் வழங்கலாம். உதாரணமாக, உங்கள் உதவக்கூடிய புதிய உத்திரவாதியை நீங்கள் கண்டு பிடிக்கலாம்.

நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும்?

விடுதலையான பின்னர், கனடாவில் நீங்கள் தங்கினால், உங்கள் விடுதலைக்காக விதிக்கப்பட்ட எல்லா நிபந்தனைகளுக்கும் நீங்கள் கீழ்படிய வேண்டும். நீங்கள்  கனடாவிலிருந்த வெளியேற்றப்படும் வரை  அல்லது  அவை மாற்றபடும் வரை அல்லது ரத்து செய்யப்படும் வரை இந்த நிபந்தனைகள் நிலவில் இருக்கும்.
நிபந்தனைகள்  விதிக்கப்பட்டு அதிக நாட்களாகியிருந்து, நீங்கள் அவற்றிற்கு கீழ்படிந்து வருகிறீர்கள் என்றாலோ, அல்லது நிபந்தனைகள்  விதிக்கப்பட்ட நிலையிலிருந்து  உங்கள் சூழ்நிலை அதிகமாக மாறியுள்ளது என்றாலோ உங்கள் நிபந்தனைகளை மாற்ற அல்லது ரத்து செய்ய குடிநுழைவு பிரிவை கேட்டுக்கொள்ளலாம். உங்கள் நிபந்தனைகள்  மாற்றப்பட வேண்டுமென ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை விளக்கி குடிநுழைவு பிரிவுக்கு கடிதம் எழுத வேண்டும். சிபிஎஸ்ஏ- CBSA/ASFC க்கும் கடிதத்தின் ஒரு நகலை அனுப்ப வேண்டும்.

குறிப்பு: மந்திரி உங்களை "நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜை" என அடையாளப்படுத்தினால் இந்த துண்டுபிரதியில் உள்ள பெரும்பாலான காரியங்கள் உங்களுக்கு பொருந்தாது. நீங்கள் ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜையாக இருந்தால், உங்கள் சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தடுப்புக்காவல் மறுஆய்வுகள் வேலை செய்கிறது என்பதை உங்கள் விசாரணையின் போது உறுப்பினர் விளக்குவார்.