புதிய கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள்

​குடிவரவு அகதிகள் சபை (குஅச)IRB நேரடி விசாரணையை தொடங்கும் போது, விசாரணை அறையிலுள்ள பங்குபற்றுபவர்கள், ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்களை பாதுகாப்பதற்கான முக்கியமான கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைபெறும்.

உங்கள் விசாரணைக்கு முன்: குஅச க்கு முன்னிலையாகும் அனைவரும் ஒரு சுய மதிப்பீட்டு வினாக்கொத்து ஒன்றை பூரணப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார்கள் முதலில் முன்னிலையாகும் அறிவித்தல் கிடைக்கும் போதும், பின்பு குஅச பணிமனைக்கு வரும் போதும். இம் மதிப்பீடு:

 • உங்களுக்கு அல்லது உங்களுடன் வசிக்கும் யாருக்காவது நோயறிகுறிகள் காணப்பட்டால், அல்லது
 • அண்மையில் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்புகளைப் பேணி இருந்தால்.

உங்களுடைய நேரடி விசாரணை நடைபெற்று 2 கிழமைகளில், உங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், நீங்கள் குஅச இற்கு சென்று வந்ததை, பொது சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதை உறுதி செய்து கொள்ளவும்.

நீங்கள் குஅச இற்கு ஏன் சென்றீர்கள் என்பதை பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க தேவையில்லை.

நீங்கள் உங்கள் விசாரணைக்கு வரும் போது எதிர்பார்ப்பது என்ன

உங்கள் வருகை அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்னதாக, விசாரணைக்கு வருகை தரல் வேண்டும்.

நீங்கள் வந்தவுடன், சரீர இடைவெளி நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.

 • பொது இடங்களில் மருத்துவ ரீதியற்ற முகக் கவசம் தேவைப்படுவதுடன், தேவையேற்படின் வழங்கப்படும். நீங்கள் முகக் கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் (விலக்களிப்பு பட்டியலை கீழே பார்க்கவும்), தயவு செய்து உங்கள் பிரதேசத்திலுள்ள பொருத்தமான பிரிவைத் தொடர்பு கொண்டு, உங்கள் விசாரணை இடம் பெற முன் ஆயத்தங்களை சரியாக செய்து கொள்ளவும்.
 • எப்போதும் 2 மீற்றர் (6அடி) சரீர இடைவெளியை உங்களுக்கும் மற்றவர்க்குமிடையே பேணவும்.
 • நில அடையாளங்கள், சுவர் குறியீடுகள் மற்றும் குஉச ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்றவும்.
 • சகல பொது இடங்களும் நாள்முழுதும் அடிக்கடி சுத்தம் செய்யப்படும்.

வரும் போது சகல பார்வையாளர்களும் ஒரு சுய மதிப்பீட்டு வினாக்கொத்தை பூரணப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

முகக் கவசம் அல்லது முக மறைப்பு அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள்

 • 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
 • முகக் கவசம் அணிய முடியாத மருத்துவ தேவையுள்ளவர்கள். இதுவும் உள்ளடங்கலாக, ஆனால் வரையறையற்ற :
  • மருத்துவ நிலைமைகள், மன ஆரோக்கிய நிலை, அறிவாற்றல் நிலை, அல்லது இயலாமை ஆகிய முகக்கவசம் அல்லது முக மறைப்பு அணிய முடியாத நிலைமைகள்.
  • சுவாசிக்க முடியாத மருத்துவ நிலையிலுள்ளவர்கள்.
  • காது கேட்காத ஒருவர் அல்லது காது கேட்காத இன்னொருவருடன் கதைக்கும் போதும், மற்றவர் கதைக்கும் போது முக்கியமாக வாயசைவைக் கவனித்து உரையாடும் போதும்.
 • ஒருவரின் உதவியில்லாமல் முகக்கவசத்தை அணியவோ அல்லது அகற்றவோ முடியாத தனி நபர்கள்
 • கனேடிய மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவான தங்குமிட வசதிகள் தேவைப்படும் தனி நபர்கள்

கட்டடத்தில் உள் நுழைதல்

 
 • மின் தூக்கியினை நோக்கி அல்லது விசாரணை அறையை நோக்கி செல்லும் போது சகல அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்.

மின் தூக்கிகள்


 
 • குறிப்பிட்டளவு நபர்களை அனுமதித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், மேற்கொள்ளப்படும்.
 • ஒவ்வொருவருடைய பாதுகாப்பிற்காகவும், மின் தூக்கி அடிக்கடி சுத்தம் செய்யப்படும்.

வரவேற்பறைகள், பிரதான வழிகள், தங்கும் அறைகள்

 
 • நீங்கள் உங்கள் விசாரணை நடக்குமிடத்திற்கு வந்தவுடன், ஒரு வரிசையில் நின்று, உங்கள் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
 • சுகாதார வினா கொத்தை பூர்த்தி செய்ததுடன், உங்கள் கைகளை சுத்தம் செய்யுமாறு பாதுகாப்பு உத்தியோகத்தரால் கேட்கப்படுவீர்கள். ஒரு தொடுகையற்ற அகச்சிவப்பு நிழற்பட கருவியினால் உங்கள் உடல் வெப்பநிலை அளவிடப்படும்.
 • நீங்கள் அதிகுறைந்த பாதுகாப்பு திரையிடல் தகைமைகளை பெறாதவிடத்து, அல்லது அகச்சிவப்பு நிழற்பட கருவியில் உங்கள் உடல் வெப்பநிலை, சாதாரண உடல் வெப்பநிலையைவிட அதிகமாக காணப்படுமிடத்து, உங்கள் விசாரணை ஒத்தி வைக்கப்படலாம்.
 • பதிவு செய்யும் இடத்திற்கோ, அல்லது விசாரணை அறைக்கோ அல்லது இரண்டிற்கும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட வருவார், அல்லது வழி காட்டுவார். ஆவணங்களை நிரப்பும் போதோ அல்லது வழங்கும் போதோ பதிவறை ஊழியர்களின் வழிகாட்டலுக்கேற்ப சகல வழிகளையும் பின்பற்றவும்.

விசாரணை அறைகள்

 
 • பங்குதாரர்கள், பஙகாளிகள் ஆகியோரின் அனுபவங்கள் பின்னூட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, குஅச தனது உறுப்பினர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன், ஒரே விசாரணை அறையில் ஆலோசகர்கள்-கட்சிக்காரர்கள் எனும் முறையில் நேரடி விசாரணை ஆரம்பமாகின்றது.சில விசாரணைகளில் மேலும் பலர் சம்பந்தப்படுவதால், விசாரணை இரு வேறு விசாரணை அறைகளில், ஒலிஒளி மாநாட்டில் இணைக்கப்படும்.
 • திங்கட்கிழமை , செப்டெம்பர் 14, முதல் விசாரணை அறைகளில் சாட்சியமளிக்கும் போதோ, சமர்ப்பிக்கும் போதோ, மருத்துவ ரீதியான எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது விலக்களிப்புக்குட்பட்டது. இந்த விலக்களிப்பு வேண்டப்படுபவர்கள், தலைமை தாங்கும் உறுப்பனரிடம் விண்ணப்பம் செய்யலாம்.
 • விசாரணைக்கு முன்பும், நீங்கள் வெளியேறிய பின்பும் விசாரணை அறைகள் தொற்று நீக்கம் செய்யப்படும்.
 • பாதுகாப்பு அதிகாரி, உங்களை விசாரணை அறைக்கு, உங்கள் இருக்கைக்கு அழைத்துச் செல்வார்.
 • விசாரணை அறையில் தூர இடைவெளி நடைமுறைகள் காணப்படும். சகல விசாரணை அறைகளில் இருபுறமும் பார்க்கக் கூடிய கண்ணாடியாலான தடுப்பு காணப்படும். விசாரணை அறைகளில் சிறந்த ஒலிப்பதிவுகளுக்காக ஒலிச் சாதனங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தெளிவாகவும், சத்தமாகவும் பேசினால், அது தீர்மானம் எடுப்பவருக்கு தடைகளை தாண்டி உங்களை கேட்கக் கூடியதாக இருக்கும்.
 • தலைமை தாங்கும் உறுப்பினரின் விருப்பில், விசாரணையில் பங்குபற்றும் தனிநபர்களின் முகக்கவசத்தை தற்காலிகமாக அகற்ற கேட்கலாம்- உதாரணமாக, ஒரு ஒலி சம்பந்தமான பிரச்சினையை தெளிவுபடுத்த- ஒரு முழுமையான முறையான விசாரணையை உறுதி செய்யதற்காகும்.
 • விசாரணை அறையினுள் செல்லும் போதோ அல்லது வெளியேறும் போதோ கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளவும். வாசல்களிலும் மேசையிலும் கைத் தொற்று நீக்கிகள் கிடைக்கப்பெறும்.
 • விசாரணை முடிவுற்ற பின், பாதுகாப்பு அதிகாரி உங்களை விசாரணை அறையை விட்டும் அக்கட்டிடத்தை விட்டும், வெளியேறும் திசை அடையாளங்களை பின்பற்றி உடனடியாக வெளியேறுமாறு கூறுவார். நீங்கள் உங்கள் முகக்கவசத்தை அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொது கழிவறைகளும் நீரூற்றுக்களும்

 
 • ஒரே நேரத்தில் கழிவறையை பாவிப்பதற்கான நபர்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சகல விதமான குறியீடுகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்.
 • முக்கியமாக கழிவறையைப் பாவித்த பின், கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு, 20 விநாடிகளுக்கு கழுவவும்.
 • நீரூற்றுக்களில் ஒரு முறை மாத்திரம் பாவிக்க கூடிய குவளைகள் வைக்கப்பட்டிருக்கும், இவை அடிக்கடி சுத்தம் செய்யப்படும். உங்கள் வசதிப்படி குடிநீர் போத்தலை கொண்டு வரவும்.